Advertisement

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

இந்தியாவின் மின்சக்தி தேவைகளை நிறைவேற்றுவதில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
அணுசக்திப் பிரிவின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்., நிறுவனம் அங்கு காலியாக இருக்கும் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்: ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவிலான சயிண்டிபிக் அசிஸ்டென்டில் டிப்ளமோ இன் மெக்கானிக்கலில் 3ம், டிப்ளமோ இன் எலக்ட்ரிகலில் 2 இடங்களும், பி.எஸ்சி.,யில் 1ம், பிரிவு 1 டிப்ளமோ இன் மெக்கானிக்கலில் 9ம், இதே பிரிவு எலக்ட்ரிகலில் 4ம், எலக்ட்ரானிக்சில் 5ம், கெமிக்கலில் 10ம், பி.எஸ்சி., கெமிஸ்ட்ரியில் 6ம், சிவிலில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 3.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து இன்ஜினியரிங் டிப்ளமோவில் உரிய டிரேடு பிரிவில் படிப்பு தேவைப்படும். பி.எஸ்சி., படிப்பை இயற்பியல் மற்றும் வேதியியலில் முடித்தவர்கள் அந்தந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களை இணையதளத்தை பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 ஆக., 3.

விபரங்களுக்கு:www.npcil.nic.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement