மூலிகை உணவு தயாரிப்பு: செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மதிப்பு கூட்டிய மூலிகை உணவு தயாரிப்பு குறித்து, இன்றும், நாளையும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்குபெற விரும்புவோர், நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 044 - 2745 2371
நாட்டுக்கோழி வளர்ப்பு: வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 - 2726 4019
திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையம் இயங்குகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பல தரப்பினரும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ப்புக்கு: 94424 85691
சிறப்பு பயிற்சி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!