Advertisement

ரயில்வேயில் வாய்ப்பு

Share

நம் நாட்டின் போக்குவரத்தை பெரிதும் நிர்ணயிக்கும் இந்திய ரயில்வேயின் தென் கிழக்கு மண்டலத்தில் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் பிரிவினருக்கான சிறப்புக் காலியிடங்களான 10ஐ நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 38 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பிளஸ் 2 அளவிலான படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பில் ஆர்டிசன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது தவிர ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் தொடர்பான சிறப்புத் தகுதியும் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்தை பார்த்து அறியவும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத் தேர்வு வாயிலாக இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500.

the Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Bungalow No.12A, Garden Reach, Kolkata-700043 (Near BNR Central Hospital)

கடைசி நாள்
: 2019 ஆக., 5.

விபரங்களுக்கு : www.rrcser.co.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement