Advertisement

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

தென்னிந்தியாவின் கொச்சியில் மிகவும் பிரபலான கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கப்பல் கட்டும் தளத்தில் அசிஸ்டென்ட் (எச்.ஆர்.,) அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 30 இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 25.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்., ஆபிஸ் தொடர்புடைய பேக்கேஜ்களில் நல்ல திறன் தேவைப்படும். இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

ஸ்டைபண்டு: இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.10 ஆயிரத்தை ஸ்டைபண்டாகப் பெறலாம்.

தேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஜூலை 25.

விபரங்களுக்கு: www.cochinshipyard.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement