Advertisement

'நச்'னு நாலு லேப்டாப்

மொபைலில் வீடியோ கேம் விளையாடுவது அதிகரித்து வந்தாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விளையாடுவதற்கு அது ஒருபோதும் ஈடாகாது. இருப்பினும், ஓரளவுக்கு, லேப்டாப்புகளிலும் அதே அனுபவத்தை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. குறிப்பாக, இதற்கென சிறப்பு, ஜி.பி.யு., எனும், கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்கள் அறிமுகம் ஆகின்றன. அந்தவகையில், வீடியோ கேம் விளையாடுவதற்கு ஏற்ற லேப்டாப்களில் 'நச்'னு நாலு இதோ:

ஏசர் நைட்ரோ ரைஜென் 5
ஏசர், அண்மையில் பல லேப்டாப்களை அறிமுகம் செய்திருந்தாலும், அறிமுகம் ஆன உடனேயே வெற்றியை தொட்டது, இந்த லேப்டாப். இதன் பெரும்பாலான லேப்டாப்கள், இன்டெல் பிராசஸருடன் இருந்தாலும், இது, குவாட்கோர் எம்.டி. ரைஜென்5 சிப்செட்டுடன் வந்துள்ளது. 8 ஜிபி ரேம் உடன், 15.6 அங்குல திரை உள்ளது. ஒரு டி.பி., ஹார்டு டிரைவ், விண்டோஸ் 10 உடன் வந்துள்ள இதன் எடை, 2.7 கிலோ.
விலை: ரூ. 49,990

எச்.பி. பெவிலியன் கேமிங் லேப்டாப்
இந்த வரிசையில் ரக ரகமான லேப்டாப்கள் வந்துள்ளன. இருந்தாலும், 'பி.சி. 406 டி.எக்ஸ்.' மாடல் சிறப்பான ஒன்று. 'இன்டெல் கோர் ஐ5 8300 எச்.,' சிப்செட், 8 ஜிபி.,ரேம், ஒரு டி.பி., ஹார்டுடிரைவ், விண்டோஸ் 10 என கலக்கலாக இருக்கிறது. 15.6 அங்குல திரையுடன், கீபோர்டுக்கு கீழே விளக்குகளும் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் மார்டனாக இருக்கிறது. 90 நிமிடத்தில், 90 சதவீதம் அளவுக்கு, விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம் என்கிறது, எச்.பி., நிறுவனம். எடை 2.1 கிலோ.
விலை: ரூ. 59,885

லெனொவோ லிஜியன் ஒய்.530
லிஜியன் ரக வரிசையில், நிறைய லேப்டாப்கள் வந்துள்ளன. 15.6 அங்குல திரை கொண்ட இந்த மாடலில், முழு எச்.டி., டிஸ்பிளே, 'இண்டல் கோர் ஐ7-8750எச்.,' பிராசஸரும் உள்ளது. இத்துடன், 'என்விடியா ஜிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ். 1050' சி.பி.யு., 4ஜி.பி., பிரத்யேக நினைவகத்துடன் உள்ளது. இந்த லேப்டாப்பில், குறிப்பிடத்தக்க இன்னொரு சிறப்பு, இதன் ஹார்மன் ஸ்பீக்கர். மேலும், ஒரு டி.பி., ஹார்டு டிரைவ் மற்றும், 128 ஜி.பி., எஸ்.டி., கார்டு வசதியும் உள்ளது.
விலை: ரூ. 91,990

அசுஸ் டி.யு.எப்., எப்.எக்ஸ்.505
அல்ட்ரா சிலிம்மாக வந்திருக்கும் இந்த லேப்டாப், அதிக நேரம் விளையாடினாலும் சூடாவதில்லை. 'ஆன்டி டஸ்ட் கூலிங்' சிஸ்டத்துடன், சி.பி.யு., ஜி.பி.யு., இரண்டுக்கும், இரண்டு விசிறிகளுடன் வந்துள்ளது. 15.6 அங்குல திரை, 8ஜிபி ரேம்., 'இன்டெல் கோர் ஐ7-8750எச்' பிராசஸர் கொண்டது. ஒரு டி.பி., ஹார்டுடிரைவ் உடன் வந்துள்ளது.
விலை: ரூ. 74,990

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement