வதந்திகளுக்கு பஞ்சமில்லாத வர்த்தக உலகம் இது. லேட்டஸ் செய்தி, ஆப்பிள் நிறுவனம், மடிக்கக்கூடிய, ஐபேடு ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கிறது என்பது தான்.
இந்த, ஐபேடு, மடிக்கக்கூடிய வகையில் மட்டுமின்றி, 5ஜி தொழில்நுட்பத்துடனும் தயாராகிறது என்கிறார்கள். மேலும், 2020ல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த ஆண்டில் மட்டும், மூன்று, ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வருகின்றன.
செய்திகள், மெய்யா பொய்யா என்பதை விட்டுவிட்டு, சரக்கு வந்தால் வரவில் வைத்துக்கொள்ள வேண்டியது தான்.
வந்தால் வரவு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!