Advertisement

மாண்புமிகு மாணவி!

யார் இவர்?
பெயர்: எ.ரெப்லின்
வகுப்பு: 10ம் வகுப்பு
வசிப்பிடம்: புலவன்விளை, கன்னியாகுமரி
பெற்றோர்: எட்வின் - இன்ப ரெஜிலா
அடையாளம்: படிப்பாளி/படைப்பாளி (ஆங்கில எழுத்தாளர், புகைப்பட கலைஞர், குறும்பட இயக்குனர், ஓவியர்)

'ரியாலிட்டி ஷோ'க்களில், 'டைட்டில் வின்னர்' ஆகும் நவயுக லட்சியங்கள் ஏதுமில்லாமல், ஒரு குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதை தினசரி கவனித்து, அதையே கதையாக எழுதியிருக்கிறார் ரெப்லின். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தன் கனவுகளில், எது ஒன்றும் மற்றொன்றை பாதிக்காத வண்ணம் கையாள்வது இவரது பலம்.

எழுத்தாளர் ரெப்லின்
'புத்தக வாசிப்பு'ங்கிறது அப்பாவால ஏற்பட்ட பழக்கம். வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்குற மாதிரி, மாதம் தோறும் எனக்குன்னு புத்தகங்கள் வந்திடும். அஞ்சு வயசுல இருந்தே வாசிக்க ஆரம்பிச்சதால, 'எழுதணும்'ங்கிற ஆசையும் சீக்கிரமே வந்திடுச்சு. என்னோட முதல் சிறுகதை எழுதுறப்போ, எனக்கு வயசு ஏழு. இதுவரைக்கும், 8 கதைகள் கொண்ட ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு நாவலும் எழுதியிருக்கேன்.

புகைப்பட கலைஞர் ரெப்லின்
மதுரை திருப்பரங்குன்றத்துக்கு போற நேரங்கள்ல, அங்கே இருக்குற மலை, பாறை எல்லாமே எனக்கு வெவ்வேறு உருவங்களா தெரியும். ஒரு மலையை குறிப்பிட்ட கோணத்துல இருந்து பார்த்தா, யானை மாதிரி இருக்கும்; ஒரு பாறை... மனுஷனோட தலை மாதிரியே தெரியும்.
இப்படி... என் பார்வை கோணங்களை அடிப்படையா வைச்சு, 5,000ற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அதுல இருந்து 250 படங்களை தேர்வு பண்ணி, 'அதர் பேஸ் ஆப் திருப்பரங்குன்றம்' தலைப்புல ஆல்பமா வெளியிட்டேன்.

குறும்பட இயக்குனர்
'டஸ்ட்' - இதுதான் என் குறும்படத்தோட பேரு. 'பாட புத்தகங்களை தாண்டி பிள்ளைகளுக்கு இருக்குற விருப்பங்களை, பெற்றோர்கள் உதாசீனப்படுத்தக் கூடாது'ங்கிற கருத்தை வலியுறுத்துற கதை. வெறுமனே பாட புத்தகங்களை மட்டுமே படிச்சா, அறிவு விசாலமாகும்; மனசு ஆகுமா; கலை தான் மனசை விசாலமாக்கும்! இந்த குறும்படத்தை இயக்கினதோட மட்டுமில்லாம, நானே நடிக்கவும் செஞ்சேன்.

என் பெருமை
என் வேலைகள்ல, மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்கிறது எனக்குப் பிடிக்காது. என் அம்மா எனக்கு உதவ முன் வந்தா கூட, நான் தவிர்த்துடுவேன். காரணம்... 'என் படைப்பு என்னோடதா மட்டும் இருக்கணும்'ங்கிற எண்ணம்; என் படைப்பு... என் பெருமை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement