Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
'ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு சத்துணவுப் பணி வேலையில முன்னுரிமை'ன்னு சொல்ற உங்க அரசு, நடைமுறையில என்ன செய்யுது தெரியுமா?
'சத்துணவு அமைப்பாளர் வேலை கொடுங்க'ன்னு கேட்டு, இரண்டு வருஷமா நான் விண்ணப்பிச்சிட்டு இருக்குறேன். நீங்க எதிர்பார்க்கிற எல்லா சூழலும் எனக்கிருந்தும், எனக்கு இன்னும் பணி வாய்ப்பு கிடைக்கலை.
ஆமாங்கய்யா... எனக்குன்னு யாரும் ஆதரவு கிடையாது. இடது கண் பார்வை கிடையாது.
மில்லுல வேலை பார்த்த என் கணவரை, சர்க்கரை நோய் கொண்டு போயிருச்சு. இப்போ, நாலு பிள்ளைகளோட தனி மரமா நிற்கிறேன். 100 நாள் வேலையில கிடைக்கிற கூலி, பத்த மாட்டேங்குதுய்யா!
ஜூலை 19, 2017ல, கரூர் ஆட்சியர்கிட்டே நேரடியாவே மனு கொடுத்தேன். ஒத்த கண் பார்வையோட, நாலு பிள்ளைகளையும் அழைச்சுக்கிட்டு, 50 கி.மீ., தொலைவுல இருக்குற கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பல தடவை அலைஞ்சிட்டேன். கடைசியா, போன ஜூன் 10ம் தேதி கூட, மனு கொடுத்துட்டு வந்தேன்.
அய்யா... உங்க ஆட்சியில பட்டினியா கிடக்குறோம்; நீங்க கண்டுக்காம இருக்கலாமா?
- ஆதரவற்ற நிலையில், நான்கு குழந்தைகளுடன் வாழ வழி கேட்கும் மாற்றுத்திறனாளி பெண்ணான, 33 வயது சசிகலா, தெற்கு அய்யம்பாளையம், கரூர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement