Advertisement

இதயத் திருடி!

அன்று, வெளிநாட்டில் உள்ள மகனுடனும், மகளுடனும் பேசும் 'ஸ்கைப்' நாள். தன் கணவன் அருணின் புகைப்படம் மடிக்கணினியில் திரையாக இருக்க, 'ஸ்கைப்' உரையாடலை துவக்கினாள் சாந்தி.
'அம்மா... இன்னும் ரெண்டு மாசத்துல ரிட்டயர்டு ஆகிடுவே; அதான் ஒரு யோசனை...'
'என்ன?'
'வயதான விதவைகளுக்கு சுயம்வரம் ஏற்பாடு பண்ற, 'சுயம்வர்'னு ஓர் அமைப்பு. அவங்கவங்க சொத்து அவங்கவங்க வாரிசுகளுக்குன்னு ஒப்பந்தம் பண்ணிட்டு திருமணம் பண்ணிக்கலாம். உனக்குன்னு ஒருத்தர் இருந்தா, நாங்க கவலைப்பட மாட்டோம்!'
'எனக்கு அப்படி ஒருத்தர் இருக்கார்... பேரு நந்து!'
'என்னம்மா சொல்றே; இந்த வயசுல, 'லவ்' சிக்கலாயிடும்!'
'ஏம்ப்பா... நீங்க எனக்கு சுயம்வரம் ஏற்பாடு பண்ணலாம்; நான் ஒருத்தரை விரும்பக் கூடாதா?'
'சரி... அந்த ஆளை எங்களுக்கு அறிமுகப்படுத்து; நாங்க ஓகே...'
'இதுல யார் சம்மதமும் எனக்கு தேவையில்லை!' - 'ஸ்கைப்' கட்.
'உடன் இருக்க துணை தேவை' - இது, சாந்தி வாரிசுகளின் அன்பு;
'துணை என்பது உடன் வாழ, உடன் இருக்க அல்ல!' - இது, சாந்தியின் முடிவு.

படைப்பு: வில் முறியாத சுயம்வரங்கள் [சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - சிறுகதை தொகுப்பு]
எழுதியவர்: அம்பை
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement