என் வயது, 40; விசைத் தறியில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை தீவிரமாக வாசித்து மகிழ்கிறேன். இதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, பள்ளி நினைவுகளை மலர வைக்கிறது!
மனதை திறந்து சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்' துாண்டுகின்றன. குழந்தைகளின் ஓவியத்திறனை, 'உங்கள் பக்கம்' பகுதி மேம்படுத்துகிறது. கட்டுரைகள், அறிவை பட்டை தீட்டுகின்றன. குழந்தைகளுக்கு, சத்தான உணவு வகைகளை தயாரிக்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி கற்றுத் தருகிறது.
சிறுகதைகள், அறிவுத்திறனைத் துாண்டி, ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவு, சிறியவர், இளைஞர், பெரியவர் என, அனைவருக்குமான அறிவு களஞ்சியமாக உள்ளது சிறுவர்மலர்!
- என்.செந்தில்குமார், திருப்பூர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!