Advertisement

ஆசிரியர் தந்த மிட்டாய்!

Share

விருதுநகர் மாவட்டம், அயன்கொல்லங்கொண்டான் கிராமப் பள்ளியில், 2ம் வகுப்பு படித்தபோது, நடந்த நிகழ்ச்சி இது.
பள்ளிக்குச் செல்ல மறுத்து, தினமும் அடம் பிடித்து அழுது ரகளை செய்வேன். மிகவும் சிரமப்பட்டு, அழைத்து சென்று வகுப்பறையில் விடுவர் பெற்றோர்.
என்னை கவர, மிட்டாய் தந்தார் ஆசிரியர். அதை சுவைத்ததும் மகிழ்ச்சியில், 'தினமும் தருவீர்களா...' என்று கேட்டேன்; தருவதாக சொன்னார். மிட்டாய் சுவை ஈர்ப்பில், தவறாமல் பள்ளிக்குச் சென்றேன்.
ஒரு நாள், வகுப்பாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தார் என் தந்தை. பின், மிட்டாய் பொட்டலங்களையும் கொடுத்ததைக் கவனித்தேன்.
மிட்டாய் கொடுத்து கவர ஏற்பாடு செய்தது, அப்பா தான் என, தெரிந்தது.
அதே நேரம், என் செயலை எண்ணி வருத்தமும் ஏற்பட்டது. அப்பாவிடம், 'இனி தவறாமல், பள்ளிக்கு செல்வேன்...' என, பணிவுடன் கூறி கடைபிடித்தேன்.
என் பேரக் குழந்தைகள், மூன்று வயதில் மிகவும் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். காலம் மாறியுள்ளது.
- செ.நடராஜன், விருதுநகர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement