கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் நாட்டில், கருங்கடல் கடற்கரையில் அலுஸ்டா நகர் உள்ளது. கடலை ஒட்டி கிரிமிய மலைத்தொடர் அமைந்துள்ளதால், இயற்கை காட்சிக்கு பஞ்சமில்லை.
இதை ரசிக்க, ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து செல்கின்றனர். கடற்கரையில் நீண்ட மூக்கு திமிங்கல காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் திமிங்கலங்கள் உள்ளன. இவை அடிக்கும் கூத்து, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கிறது.
சாகசங்கள் செய்து, பார்வை யாளர்களை உற்சாகப்படுத்துகின்றன.
திமிங்கலகளுடன் பேசலாம்; உடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.
- ராஜிராதா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!