ஐரோப்பா கண்டம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரைப் பார்க்க, அமெரிக்கர் ஒருவர் வந்தார். டாக்சி ஓட்டுனர், லண்டன் கோபுரத்துக்கு அழைத்துப் போனார்.
'இது போன்ற கோபுரத்தை, எங்கள் நாட்டில், இரண்டே வாரத்தில் நிர்மாணிப்போம்...' என்றார் அமெரிக்கர்.
'இது, பக்கிம்ஹாம் அரண்மனை... இங்கு தான் ராணி வசிக்கிறார்...' என்றார் ஓட்டுனர்.
'அப்படியா... அமெரிக்கா, டெக்சாசில் இது போன்ற அரண்மனையை, ஒரே வாரத்தில் கட்டி விடுவோம்...' என்றார் அமெரிக்க பயணி.
அடுத்து வெஸ்ட்மினிடர் தேவாலயம் பக்கம் அழைத்து சென்றார்.
'அது என்ன...' என்றார் பயணி.
அவரது நக்கல் பேச்சைக் கட்டுப்படுத்த எண்ணிய ஓட்டுனர், 'ஐயா... இது நம்ப முடியாத கட்டடமாக இருக்கிறது. இன்று காலை இங்கு கட்டடம் எதுவும் இல்லாமலிருந்தது...' என்றார்.
அமெரிக்க பயணி அசந்து விட்டார்.
அடேயப்பா! இவ்வளவு தானா!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!