Advertisement

'ஸ்டூடியோ ஹெட்போன்'

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ஆடியோ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான, 'ஆடியோ டெக்னிக்கா' புதிதாக, ஏ.டி.எச்-.எம்.50 எக்ஸ்.பி.டி., எனும் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டூடியோ பயன்பாட்டுக்கு இது மிகவும் உகந்தது என்கிறது இந்நிறுவனம்.
பொதுவாகவே இந்நிறுவனத்தின், 'எம்' சீரிஸ் ஹெட்போன்கள், ஸ்டூடியோ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த புதிய அறிமுகத்தில், சிறப்பான புளுடூத் இணைப்பு வசதியும் இருப்பது மேலும் சிறப்பு. இதில் போன் அழைப்புகளையும் ஏற்கலாம்.
'ஆப்பிள், ஆண்ட்ராய்டு' போன்களில், 'ஆடியோ டெக்னிக்கா' செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் ஹெட்போனை செயல்படுத்தலாம். இதிலிருந்து ஸ்மார்ட் போனில் குரல் வழி உத்தரவும் பிறப்பிக்கலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 40 மணி நேரம் வரை நிற்கும்.
விலை 18,490 ரூபாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement