Advertisement

'மி பேடு - 4'

'சயோமி' நிறுவனம், 'மி பேடு - 4' டேப்லெட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு, 'மி பேடு - 3' அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து இப்போது, மி பேடு - 4 அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மி பேடு - 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. சயோமி தற்போது இந்தியாவில் வலுவாக காலுான்றி இருக்கும் நிலையில், மி பேடு - 4 இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மி பேடு - 4 இரண்டு மாடல்களில் வந்துள்ளது. 4ஜி ரேம், 64 ஜிபி உள்ளீட்டு திறன், வை - பை மூலமான இணைப்பு மட்டும் கொண்ட மாடலின் விலை இந்திய மதிப்பில் 11,497 ரூபாய். இன்னொரு மாடல் வை - பை மற்றும் எல்.டி.இ., இணைப்பு கொண்டது. விலை 15,628 ரூபாய்.
தங்கம், கறுப்பு ஆகிய நிறங்களில் வந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement