Load Image
Advertisement

வளம் பெருக்கும் மண் புழுக்கள்

மண் வளம் பெருக மண் புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. மண் புழுக்கள் கிடைக்க பயிர்கழிவுகளை உட்கொண்டு நன்மை செய்கின்றன. பயிர் வளர ஊக்கியாக செயல்படும். மண் புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க, அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன.

இத்திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்திதான் 'மண் புழுக்குளியல் நீர் தயாரித்தல்' ஆகும். இதை ஆங்கிலத்தில் 'வெர்மி வாஷ்' என்பர். மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து, அதன் அடிப்பாகத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் சிறிய துளைகள் இட்டு அதில் இருந்து நீர் வடியும் வகையில் அமைக்க வேண்டும்.

மண் புழு உள்ள பானைக்கு மேல்புறம் நீர் நிரம்பிய கலயம் அமைத்து, அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போல மூன்று கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறு துளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக நீர் வர விட வேண்டும். ஒரு இரவு முழுவதும் இவ்வாறு, சொட்டு சொட்டாக விழும் நீர், மண்புழுவின் உடலையும், மண் புழு ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவிய பின், பானையின் கீழ் பகுதி துளைகள் வழியே வெளியேறும்.

இவ்வாறு வெளியேறும் நீரே மண்புழுக் குளியல் நீர் எனப்படுகிறது. தேயிலை தண்ணீர் போல் உள்ள நீரை, பானையின் கீழ் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் குளியல் நீரை, 9 லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும். மண்புழுக் குளியல் நீரை தயாரிக்க முடியாதவர்கள் தனியாரிடம் வாங்கி பயன்பெறலாம். காய்கறி மீது மாதம் தோறும் தெளிப்பது அவசியம்.

தொடர்புக்கு 98420 07125.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement