Advertisement

வெளியே தெரியாமல்!

பெங்களூரூவைச் சேர்ந்த அசீம் பிரேம்ஜி, விப்ரோ கணினி நிறுவன நிறுவனர். பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபர்; மக்கள்சேவைக்கு பணத்தை அள்ளி தருவதில் முதன்மையானவர்.
பிரேம்ஜி பவுன்டேஷன் மூலம், இதுவரை, ௨௮ ஆயிரம் கோடி ரூபாய், நன்கொடையாக வழங்கியுள்ளார்!

இப்படியும் ஒரு சேவை!
பெங்களூருவை சேர்ந்தவர், டாக்டர் சுனிதா மகேஷ்வரி; குழந்தைகள் இதய நோய் நிபுணர். 2002ல், ஒரு வித்தியாசமான எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தார். குழந்தைகள், ஓடி விளையாட ஏதுவாக, விளையாட்டு சாதனங்களை பூங்கா, பள்ளி மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் அமைப்பதே அவர் எண்ணம்!
இன்று வரை, 220 பள்ளி, பூங்கா மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில், ஊஞ்சல், சறுக்குமரங்கள் அமைத்துள்ளார்.
இது தவிர, குழந்தைகள் விளையாட, ஏதுவாக, 50 விளையாட்டு மைதானங்களை பராமரிக்கும் செலவையும் ஏற்றுள்ளார்!
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, சித்ரதுர்கா, தேவனஹள்ளி, ஹோங்கோட், கோலார் உட்பட, பல இடங்களில் இந்த சேவையை செய்துவருகிறார்.
- ராஜிராதா!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement