Advertisement

மீனம்மா... மீனம்மா...

ஆரோக்கியமான மனித உடல் வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட். ஆடு, மாடு, பன்றி, பறவை போன்றவற்றின் உடல் வெப்பநிலை, 101.3 முதல், 104 டிகிரி வரை இருக்கும். அதற்கு இணையாகவே, அவற்றின் கொழுப்பின் சூடும் அதிகமாக இருக்கும். அதிலும், கோழியின் உடல் வெப்பநிலை, 106.7 டிகிரி.
உடலில், குறைந்த வெப்பநிலை உள்ள மனிதன், உயர் வெப்பநிலை உள்ள விலங்கு மாமிசத்தை சாப்பிடும் போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். நாளங்களில், ரத்த உறையவும் வாய்ப்பு உண்டு.
மனித உடல் வெப்பத்தை விட, குறைந்த உடல் வெப்பம் உள்ள விலங்குகளின் கொழுப்பு, நன்மை தரும். அந்த வகையில், மீன் உடல் வெப்பநிலை, குறைவானது.
மீன் கொழுப்பு உருகி, திரவமாகும் தன்மையுள்ளது. அது, உணவாகும் போது, மனித ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும்.
மீன் உண்ணும் குழந்தைகளுக்கு, ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறு அதிகம் வராது.
மீனில் உள்ள, 'ஓமேகா - 3' என்ற கொழுப்பு அமிலம், மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பார்வை திறனை அதிகரிக்கும்.
மீன் உணவில் உள்ள சத்துக்களைப் பார்ப்போமா குட்டீஸ்...

வஞ்சிரம்: படுவஞ்சிரம், கோல்வஞ்சிரம், கீரிவஞ்சிரம் என, பல வகைகள் உள்ளன. கோல்வஞ்சிரத்தை, மவுலாசி என்பர். தென் மாவட்டங்களில், நெய்மீன் என, அழைப்பர். இதில், 'ஓமேகா - 3' என்ற அமினோ அமிலம் உள்ளது; நல்ல வகை கொழுப்புகளும் உள்ளன. இதை சாப்பிடுவதால் இதயம் பலம்பெறும்.

நெத்திலி: மிக சிறிய வகை மீன். இதில், 'ஒமேகா -3' சத்து அதிகம் உள்ளது. இதில் கலோரி குறைவு என்பதால், உடல் எடையை குறைக்கும். சருமத்திற்கு தேவையான, 'வைட்டமின் - இ' சத்தும் உள்ளது.

மத்தி: இந்த வகை மீனில், 'வைட்டமின்- டி' என்ற உயிர்ச்சத்து உள்ளது. புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கண், இதயம், எலும்பு ஆகியவற்றை சீராக்கும்.

காரப்பொடி: இந்த வகை மீனில், மிளகு சேர்த்து, குழம்பு வைக்கலாம்; சாப்பிட்டால், சளி தொல்லை விலகும்.

வாளை மீன்: மிகவும் நீளமாக இருக்கும்; செதில் இருக்காது; மாறாக, உடல் முழுவதும் பசை போன்ற மிளிரும் வெண் படிவம் இருக்கும். அந்த படிவத்தை, சுத்தம் செய்த பின், சமையலில் பயன்படுத்துவர். இந்திய ஏற்றுமதியில், 30 சதவிதம் இது இடம் பிடித்துள்ளது.

சூரை மீன்: வெள்ளை சூரை, ரத்த சூரை என, வகைகள் உண்டு. இதில், 100 சதவிதம் புரதச்சத்து இருப்பதால், உடலை வளர்க்கும். ஆணழகன் போட்டியில் பங்கேற்பவர்கள், ரத்த சூரை சாப்பிட்டு, உடலை முறுக்கேற்றி கொள்ளவர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement