Advertisement

அதிமேதாவி அங்குராசு!

அதிர்ஷ்டம்!
முன்னேறாமல் முடங்கியவர்கள் வாயில், சதா அடிப்படும் சொல், அதிர்ஷ்டம்.
இந்த சொல் பற்றி கவலைப்படாது, கடமையை செய்து கொண்டே இருப்பவர் பலர்.
அதிர்ஷ்டம் இருந்தால் தான், உயர முடியுமா...
ஒரு டம்ளர் பால் என்பது கடின உழைப்பு; அந்த பாலில் சேர்க்கப்படும், ஒரு தேக்கரண்டி சர்க்கரை தான் அதிர்ஷ்டம்.
கடவுள், எல்லாருக்கும் சர்க்கரையை கொடுத்து விடுவதில்லை; யாரிடம், ஒரு டம்ளர் பால் இருக்கிறதோ, அவர்களுக்கு தான் சர்க்கரையை கொடுப்பார்.
இன்னொரு உதாரணம்... கடின உழைப்பு என்பது, மாடிப்படிகளைப் போன்றது; அதிர்ஷ்டம் என்பது, 'லிப்ட்' போன்றது; சில நேரங்களில், 'லிப்ட்' பழுதடைந்து விடும்.
அப்போதெல்லாம், மாடி படிகள் தான், உயரே செல்ல உதவும்; உழைப்பை நம்புங்கள்! அதிர்ஷ்டம் தானாக வந்து, ஒட்டிக்கொள்ளும்.

திகட்டாத திராட்சை!
எல்லா வயதினருக்கும் ஏற்றது, திராட்சைப் பழம்! இதை, தினமும் சாப்பிட்டால், கொழுப்பு கரைந்து, ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்; உடலில் தங்கிய விஷம் வெளியேறும்.
திராட்சை பழச்சாறும் அருந்தலாம். உலர்ந்த திராட்சையை, வெந்நீரில் போட்டு, பிழிந்த சாறையும் பயன்படுத்தலாம்.
* தலைவலியால் அவதிப்படுவோர், தினமும் பருகினால் குணமாகும்
* பல் முளைக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு, தொடர்ந்து கொடுத்தால், நோய்கள் அண்டாது
* மலச்சிக்கலைத் தடுக்கும்; ரத்தத்தை விருத்தி செய்யும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
* கிட்னி தொடர்பான நோய்கள் நீங்கும்; ஜீரணக் கோளாறை தீர்க்கும்
* இதயத்தை சீராக துடிக்க வைத்து நோய்களைத் தடுக்கும்.
கருப்பு, சிவப்பு, பச்சை நிறங்களில் திராட்சை உண்டு. எந்த வண்ணத்து பழத்தையும் சாப்பிடலாம்; தேவையில்லாத வைரஸ், பாக்டீரியா உடலில் அண்டாது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement