Advertisement

கேரட் அல்வா

தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - 1 கிலோ
சர்க்கரை - 500 கிராம்
தனி கோவா - 250 கிராம்
ஏலக்காய் துாள் - 20 கிராம்
நெய் - 200 கிராம்
பால் - 1 லிட்டர்
வறுத்த முந்திரி - 100 கிராம்
எண்ணெய் தேவைக்கு

செய்முறை
வாணலியில் நெய் விட்டு, மிதமான சூட்டில், கேரட்டை, அடர் ஆரஞ்சாக மாறும் வரை வதக்கவும்.
இதில் பால் சேர்த்து, பால் பாதியளவு வரும் வரை கிளறவும். இந்த நிலையில், சர்க்கரை, கோவா சேர்த்து, அல்வா பதம் வரும் வரை, தொடர்ந்து, கிளற வேண்டும். ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி சேர்த்து, ஆற வைக்கவும். இந்த நிலையில் சாப்பிடலாம்.
கேரட் அல்வாவை வேறு ஒரு ருசியில் சாப்பிட விரும்பினால், ஸ்பிரிங் ரோல் தாளை, சிறு துண்டுகளாக வெட்டி, அதன் ஒரு மூலையில், கேரட் அல்வாவை ஒரு டீ ஸ்பூன் வைத்து, சிவக்க பொரித்தெடுத்து, குல்கந்த் ரசமலாயில் தொட்டு சூடாகவும் சாப்பிடலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement