Advertisement

பஞ்சாபி குல்பி!

தேவையான பொருட்கள்
கொழுப்பு நீக்காத பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 250 கிராம்
பாதாம் - 50 கிராம்
பிஸ்தா - 50 கிராம்
குங்குமப் பூ - 1 கிராம்
ரோஸ் வாட்டர் - 1 டீ ஸ்பூன்
ஏலக்காய் துாள் - 2 கிராம்
அலங்கரிக்க....
நறுக்கிய பிஸ்தா
குங்குமப் பூ


செய்முறை
பாதாம், பிஸ்தாவை, கொதிக்கும் நீரில் போட்டு, வடித்து விட்டு, ஆறியவுடன், சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், பாலை ஊற்றி, மிதமான சூட்டில், மூன்றில் ஒரு பங்கு வரும் வரை காய்ச்சவும். தொடர்ந்து, கிளற வேண்டும்.
இத்துடன் சர்க்கரை சேர்த்து, பாலுடன் கரையும் வரை கலக்கவும்.
ஆறியவுடன், பாதாம், பிஸ்தா, குங்குமப் பூ, ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
குல்பி, கன்டெய்னரில் ஊற்றி, ஊற வைத்து சிறு துண்டுகளாக்கிய பிஸ்தா, குங்குமப் பூவை மேலே வைத்து, பிரீசரில் ஆறு மணி நேரம் வைக்கவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement