Advertisement

மதுரை கறி தோசை

தேவையான பொருட்கள்
ஆட்டுக் கறி - 200 கிராம்,
பொடிசாக வெட்டியது வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 50 கிராம்
மஞ்சள் துாள் - 2 கிராம்
மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லித் துாள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன்
சீரகப் பவுடர் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 10 மில்லி
தோசை தயாரிக்க...
தோசை மாவு - 600 மில்லி
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
இட்லி பொடி - 50 கிராம்
எண்ணெய் தேவைக்கு


செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறி வேப்பிலையை சிறு துண்டுகளாக நறுக்கி, வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, சூடானதும், நறுக்கிய பொருட்கள் சேர்த்து வதக்கவும்.
இதில், பொடித் துண்டுகளாக்கிய ஆட்டுக் கறியைச் சேர்த்து, அத்துடன், மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித் துாள், சீரகத் துாள் போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
தோசைக் கல்லை சூடாக்கி, மாவு ஊற்றி, வட்டமாகத் பரவியவுடன், அதன் மேல், ஆட்டுக் கறி கலவையை பரப்பி, பொடிசாக நறுக்கிய பச்சைக் கறிவேப்பிலை, இட்லி பொடி துாவி, வெந்தவுடன், திருப்பிப் போட்டு, நன்கு வேக வைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.
தேங்காய் சட்னி அல்லது சால்னாவுடன் சூடாக பரிமாறவும்.

ஜேசு சான்டியாகு லெம்பார்டு,
தலைமை சமையல் கலைஞர்,
சவேரா ஹோட்டல்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement