Advertisement

மேங்கோ ரசமலாய்

தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர் (பாலாடை தயாரிக்க)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
குங்குமப் பூ - 15
நறுக்கிய முந்திரி - 15
ஏலக்காய் துாள் - 1/4 டீ ஸ்பூன்
பால் - 1 லிட்டர் (ரசமலாய்க்கு)
அல்போன்சா மாம்பழ சுளைகள் - 60 கிராம்
அலங்கரிக்க...
குங்குமப் பூ, ஊற வைத்து நறுக்கிய பிஸ்தா சிறிது

செய்முறை
ஒரு லிட்டர் பாலை, அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்கத் துவங்கியதும், அதில் எலுமிச்சை சாறைப் பிழியவும். பால் திரியும், அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டி அல்லது சுத்தமான துணியில் வடிகட்டவும். நீர் வடிந்தவுடன், அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி, மீண்டும் ஒருமுறை வடிகட்டவும். பாலாடை தயார்.
இதை கைகளால் லேசாக பிசைந்து, வட்ட வடிவ தட்டுகளாக செய்து வைக்கவும். ரசமலாய் தயார்.
நீரை கொதிக்க வைத்து, அரைக் கப், சர்க்கரை சேர்த்து, கரைந்ததும், வட்ட துண்டுகளாக இருக்கும் ரசமலாயை ஒவ்வொன்றாகப் போட்டால், சர்க்கரை பாகில் ஊறி, இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.
மூடி வைத்து, மிதமான சூட்டில், 30 நிமிடங்கள், வேக வைத்து, ஆற விடவும். 45 நிமிடங்கள் ஊற வேண்டும்.
இன்னொரு ஒரு லிட்டர் பாலை, பாதியாகும் வரை காய்ச்சி, மாம்பழ சுளைகள், ஏலக்காய் துாள், சர்க்கரை சேர்த்து, ஊறிய ரசமலாய் துண்டுகளை எடுத்து, கைகளால் அழுத்தி சர்க்கரை பாகை பிழிந்து விட்டு, இத்துடன் சேர்க்கவும். மேலே நறுக்கிய பாதாம், குங்குமப் பூ சேர்த்து, குளிர வைத்து, பரிமாறவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement