Advertisement

இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா...

அண்டை நாடான, சீனாவின் குஜொயு மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்களை கண்காணிப்பதற்காக,ஜி.பி.எஸ்., எனப்படும், இருப்பிடத்தை கண்டறியும் கருவி பொருத்தப் பட்ட, சீருடை தயாரித்து உள்ளனர்.
இந்த சீருடையில், மாணவர்களின் தோள்பட்டை பகுதியில், இரண்டு, 'மைக்ரோ சிப்'கள் பொருத்தப் பட்டுள்ளன.
மாணவர்கள், வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாலோ, வகுப்பறையில் துாங்கினாலோ, பள்ளியின் கண்காணிப்பு அறை மற்றும் மாணவர்களின் வீடுகளில் உள்ள, 'கம்ப்யூட்டர்'களில் அலாரம் அடிக்கும்.
மாணவர்கள் எங்கு செல்கின்றனர், என்ன நிலையில் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, சீனாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
'மாணவர்கள் என்ன, இயந்திரமா... அவர்களுக்கு என, தனிப்பட்ட விருப்பங்கள் இருக்காதா... 24 மணி நேரமும், அவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பது, என்ன நியாயம்...' என, போர்க்கொடி துாக்கியுள்ளன.
பள்ளி நிர்வாகமோ, 'சமீப காலமாக, மாணவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதனால், பெற்றோர் சம்மதத்துடன், இந்த சீருடையை வடிவமைத்துள்ளோம்...' என, காரணம் கூறுகிறது.
— ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement