Advertisement

வண்ணங்களில் நினைவு சின்னங்கள்!

ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலிருந்து, 1839ல் சுதந்திரம் பெற்ற கவுதமாலா நாட்டின், கிச்சி டவுனில், ஓர் அபூர்வ காட்சியை காணலாம்.
பொதுவாக, மயானங்களில் கல்லறைகள், வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் தான் இருக்கும். ஆனால், இங்கு பல நிறங்களில் ஜொலிக்கிறது.
இறந்தவர்களின் மனதுக்கு பிடித்த நிறத்தில், 'பெயின்ட்' அடித்து, அவர்கள் நினைவையும் போற்றினால், தங்களை சீக்கிரம் சாவு அண்டாது என, இங்குள்ள இனத்தினரிடம் ஒரு நம்பிக்கை இருந்தது.
கடந்த, 1960 - 1996ம் ஆண்டுக்கிடையே, கவுதமாலாவில், கடும் மக்கள் புரட்சி ஏற்பட்ட போது, ஸ்பெயின் தலையிட்டு, மக்களை கொன்று குவித்து, ஒரு பெரிய கல்லறைக்குள் புதைத்து விட்டது.
இன்று, கவுதமாலா மக்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர். இருந்தும், தங்களுக்கு பிடித்த நிறம் பூசுதலும், நம்பிக்கையும் தொடருகிறது.
இதில், கொடுமை என்னவென்றால், இவற்றிற்கு, ஆண்டு வாடகை உண்டு. கட்டத் தவறினால், கல்லறை இடிக்கப்பட்டு, உள்ளே இருப்பவை எரிக்கப்படும்.
—ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement