Advertisement

ஜேசுதாஸ் எடுத்த முடிவு!

இளையராஜா, தன் பாடல்களுக்கு, 'ராயல்டி' கேட்டு, அது, அனைவராலும் விமர்சனம் செய்யப்பட்டதால், அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதில்லை என, முடிவெடுத்துள்ளார் ஜேசுதாஸ்.
'பல கலைஞர்களின் கூட்டு முயற்சியால் தான், ஒரு பாடல் உருவாகிறது. எனவே, ஒருவர் மட்டும், 'ராயல்டி' கேட்பது எப்படி... வெளிநாடுகளில் ஒருவர் பாட்டு எழுதுவார். இசை அமைப்பதும், பாடுபவரும் வேறு ஒருவர். ஆனால், இங்கு அப்படியல்ல...
'பாடகர் இல்லாமல், பாடல் பிரபலமாகாது. பாடகர், வெறும் ஊழியர் என்ற எண்ணம் இருந்தால், இசை அமைப்பாளரே பாடலை பாடட்டும்... இப்போதைய என் கச்சேரிகளில், இளையராஜா பாடல்களை பாடுவதில்லை...' என்கிறார், பாடகர், ஜேசுதாஸ்.
- ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • metturaan - TEMA ,கானா

    தவறான கருத்து... இளையராஜா தன் பாடல்களுக்கான ராயல்டியை இசை குழுவுக்கு தந்துள்ளபோது .. இப்படி தான்தோன்றி தனமாக பேசி திரு யேசுதாஸ் அறிவிக்கலாமா ?

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    இசை ஞானி எல்லாரு கிட்டையும் கேக்கல்ல, ஏழை இசைகுழுக்கிட்ட கேக்கல்ல. எஸ் பி பி அமேரிக்கா போயி கோடி கோடியா சம்பாதிக்கிற நிகழ்ச்சிக்கு மட்டும் பங்கு கேட்டாரு.

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    சரியான முடிவு. இளைய ராஜா கொஞ்சம் நிதானத்துடனும், நியாயத்துடனும் நடந்து கொண்டு இருக்க வேண்டும்.

    • Manian - Chennai,இந்தியா

      அவர் கஷ்டப்பட காலத்தில் உதவி செய்திர்களா? ஏசுதாஸ் போல அவர் பாடல்களை பாட வேண்டாம். - இளைய ராசாவும் மறந்து விட்ட- முன்னோர்கள் எல்லோருமே காப்புரிமை ஏற்றிருந்தால், நாம் எல்லோரும் நாசமாததான் போவோம். அவரால் பயன் அடைந்தவர்களும் ஏழைகளுக்கு உதவி செய்திருந்தால் இளைய ராஜாவும் ராயல்டி கேட்டிருக்கமாட்டார் என்று நம்பலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement