Advertisement

'டைசன் ப்யூர் ஹாட் + கூல் ஏர் ப்யூரிபையர்'

பிரிட்டனைச் சேர்ந்த, 'டைசன்' நிறுவனம், வீடுகளுக்கான, புதிய, 'ப்யுர் ஹாட் + கூல் ஏர் ப்யூரிபையர்' சாதனத்தை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
காற்று மாசு பிரச்னைக்கு தீர்வளிக்கும் வகையில் வந்துள்ள இந்த சாதனம், வீட்டில், காற்றின் துாய்மையை பராமரிப்பதுடன், தேவைப்படும் போது அறையை குளிர்ச்சியாகவும், வெப்பமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த ஏர் ப்யூரிபையர், கவர்ச்சிகரமான வடிவமைப்பில், 360 கோணத்தில் சுழன்று, மூன்று விதமான லேசர் சென்சார் தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.
இதில் உள்ள ஒரு சென்சார், காற்றில் உள்ள அசுத்த நுண்துகள்களை அடையாளம் கண்டு கிரகிக்கும். மற்றொன்று, காற்றில் உள்ள, 'நைட்ரஜன் - டை - ஆக்சைடு, பென்சீன், பார்மல்டிஹைட்' போன்ற வாயுக்களின் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும்.
மூன்றாவது சென்சார், நாம் நிர்ணயிப்பதற்கு ஏற்ப, காற்றின் ஈரப்பதம் மற்றும் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தி, அறையை குளுமையாகவும், வெப்பமாகவும் வைத்திருக்க உதவும்.
இதன் விலை: 52,900 ரூபாய்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement