Advertisement

'அமேசான் அலெக்சா' வானொலி சேவை

'அமேசான் இந்தியா' நிறுவனம், குரல் வழி உத்தரவில் செயல்படும், 'எக்கோ அலெக்சா' சாதனத்தில், வானொலி சேவைகளையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
இதுவரை, வாய்மொழி உத்தரவில், நம் மின் விளக்கு, 'ஸ்மார்ட் டிவி' போன்ற மின்னணு சாதனங்களை இயக்கவும், நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் கட்டுப்பட்ட இந்த சாதனம், தற்போது, வானொலி சேவையையும் வழங்க துவங்கியுள்ளது.
இதில், விவிதபாரதி, எப்.எம்.கோல்டு உள்ளிட்ட, அகில இந்திய வானொலியின், 17 நிலையங்கள் ஒலிபரப்பும் நேரடி நிகழ்ச்சிகள், பாடல்கள் ஆகியவற்றை தமிழ், ஹிந்தி உட்பட, 14 மொழிகளில் கேட்டு மகிழலாம்.
பி.பி.சி., - இ.எஸ்.பி.என்., உட்பட, மொத்தம், 350 வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.
அமேசான், எக்கோ அலெக்ஸாவில், சிறப்பு திறன் பிரிவையும் இணைத்துள்ளது. இதன் இயக்கத்தை, மொபைல் போன், 'ஆப்' மூலம் துவக்கி, உலகளவில் செயல்பட்டு வரும் வானொலி நிலையங்களை உள்ளீடு செய்யலாம். பின், வாய்மொழி உத்தரவில், விரும்பிய வானொலி நிலையத்தை தேர்வு செய்து, பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement