Advertisement

வரகரிசி பாலக்கீரை உப்புமா!

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி
பாலக்கீரை - 3 கைப்பிடி
வரகரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
மிளகாய் - 5
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க.. - 2 தேக்கரண்டி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சிறிது முந்திரி, கறிவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை:
வரகரிசி, புழுங்கல் அரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும். ஒரு மணிநேரம் ஊறிய பின், அரிசி, கீரை, உப்பு, மிளகாய், புளி, வெல்லம், தேங்காய் அனைத்தையும், மிக்சியில் அரைக்கவும். இந்த மாவை, இட்லி பானையில் வேக வைத்து, பின், உதிர்த்து எடுக்கவும்.
வாணலியில், சிறிதளவு எண்ணெய் விட்டு, தாளிப்புக்கு சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, உதிர்த்த இட்லியை சேர்த்து கிளறி, மல்லி இலை துாவி இறக்கினால், வரகரிசி பாலக்கீரை உப்புமா தயார்!
- பிரேமா கார்த்திகேயன், சென்னை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement