Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மலரும் சிறுவர்மலர், அதிசய செய்திகளை அள்ளி தரும், அன்பு மலர்!
சிறுவர் முதல், முதியவர் வரை கண் கொட்டாமல் படிக்கும் செய்தி மலர்! பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொன்மலர்!
என் பேரப் பிள்ளைகள், ஆவலுடன் வாங்கிப் படிக்கும் அறிவு மலர்!
குழந்தைகளின் ஓவியங்கள் நிறைந்த, ஒய்யார மலர்! கதைகளும், கட்டுரையும் ஒட்டி, பிணைந்து, குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும், நகைச்சுவை தரும் நல்ல மலர்!
வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை, கதைகளாக கூறும் வண்ண மலர்!
'குட்டி... குட்டி...' மலர்களின் புகைப்படங்களை வெளியிடும், பூ மொட்டு மலர்!
வெளிநாட்டுச் செய்தி ஒன்றை, ஒவ்வொரு வாரமும் தருகிற புதுமலர்!
இவையாவும், ஒருங்கே அமையப் பெற்ற, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், என் இதயத்திற்கு, இதமானது, சிறுவர் மலர்!
- பொன்.ராமையா, தேனி.
தொடர்புக்கு:75988 55651

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement