Advertisement

எனர்ஜி லட்டு

தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 1 கப்
பேரீச்சை - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
உலர் திராட்சை - 1 கப்
ஏலக்காய் - 6
பட்டை - 1 இன்ச் அளவு

செய்முறை
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும், கேழ்வரகு மாவைப் போட்டு, நன்கு வாசனை வரும் வரை, பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து, கிளறிக் கொண்டே இருந்தால், அடி பிடிக்காமல், ஒரே சீராக வறுபடும். வறுத்த மாவை, வேறுபாத்திரத்தில் மாற்றி, ஆற வைக்கவும்.
* பேரீச்சம் பழத்தை, விதை நீக்கி, வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் நீரை வடித்து விட்டு, வெறும் வாணலியில், லேசாக வறுத்துக் கொள்ளவும். மிக்சியில், பேரிட்சை துண்டுகள், உலர் திராட்சை, பட்டை, வேர்க்கடலை, ஏலக்காய் விதைகளைப் போட்டு, நன்கு அரைத்து, இதில், வறுத்து, ஆறிய, கேழ்வரகு மாவையும் போட்டு, நன்கு அரைத்து, இந்தக் கலவையை, சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
* இந்த அளவில், 18 - 20 எனர்ஜி லட்டுகள் கிடைக்கும். சர்க்கரை, நெய் எதுவும் சேர்க்காத, இயற்கையான இனிப்பில் தயாராகும், இந்த எனர்ஜி லட்டு, எல்லா வயதினருக்கும் ஏற்ற ஸ்நாக்ஸ். குறிப்பாக, தேர்வு சமயத்தில், குழந்தைகளுக்கு கொடுத்தால், சக்தியை தரும்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement