Advertisement

நம்பிக்கை நலம் தரும்!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, நிகழ்ந்த சம்பவம் இது!
ஒருநாள், 'உங்க எதிர்கால கனவு என்ன...' என்று வகுப்பாசிரியர் குணசேகரன் கேட்டார். ஆளாளுக்கு ஒரு பதில் கூறினர். நான் எழுந்து, 'சினிமா இயக்குனராகப் போறேன்...' என்றேன்.
அனைவரும் சிரித்தனர்; சிலர் கிண்டல் செய்தனர். மிகுந்த வேதனையாக இருந்தது. ஆசிரியர் குறுக்கிட்டு, 'கவலைப்படாதே... நிச்சயம் நினைத்தபடி நடக்கும்; முயற்சி செய்...' என்றார். அந்த வார்த்தை நம்பிக்கையூட்டியது. பி.ஏ., முடித்ததும், முயற்சி செய்தேன்.
வாய்ப்பு கேட்டு சென்னையில் அலைந்தேன். பின், உதவி இயக்குனராக பணி செய்தேன்.
நன்றாக பயிற்சி பெற்று, தெலுங்கு, தமிழ் மொழிகளில், 'டிவி' தொடர்களை இயக்கியுள்ளேன். பிரபல நடிகை, சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஒரு தொடரை இயக்கினேன்.
தற்போது, 40 வயதாகிறது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை, உணர்ந்துள்ளேன்.
அன்று, நம்பிக்கை தந்த ஆசிரியரை, நன்றியுடன் நினைக்கிறேன்.
- பி.சி.ரகு, விழுப்புரம்.
மொபைல் எண்: 63692 50307

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement