Advertisement

அன்பரே...!

அந்த மகானின் பெயர், பயாசித்.
ஒரு நாள் -
ஒரு தெருவின் வழியாக சென்றார்; அப்போது, தெருமுனையில், ஒரு இசைக் கலைஞன் மது அருந்தி, போதையில், பிறருக்கு தொந்தரவு தரும் வகையில், இசைக்கருவி வாசித்து, பாட்டு பாடினான்.
அதைக் கண்ட பயாசித், ''பிறருக்கு தொந்தரவு ஏற்படும்படி நடந்து கொள்ளலாமா...'' என்று அறிவுறுத்தினார்.
கோபத்தில், இசைக்கருவியால், பயாசித்தின் தலையில் அடித்தான். காயம் பட்டு, ரத்தம் வழிந்தது; கூடவே, இசைக்கருவியும் உடைந்தது.
மேற்கொண்டு, எதுவும் பேசாமல், வீட்டிற்கு வந்து விட்டார், பயாசித்.
மறு நாள் -
கொஞ்சம் இனிப்பு பண்டங்களையும், பணமும் எடுத்துக் கொண்டார். கூடவே, கடிதம் ஒன்றையும் எழுதி, இசைக்கலைஞன் வசித்த இடத்திற்கு வந்தார்.
பயாசித்தைக் கண்ட, இசைக்கலைஞனுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை; முந்தைய தினம், மதுவின் போதையில் இருந்த அவன், இன்று தெளிந்த நிலையில் இருந்தான்.
''யார் நீங்கள்...'' என்று கேட்டான்.
தான் எடுத்து வந்த இனிப்பு பண்டங்களையும், பணத்தையும், கூடவே, அந்த கடிதத்தையும், தந்துவிட்டு, சென்றார்.
கடிதத்தை, படித்துப் பார்த்தான் இசைக்கலைஞன்; அதில், 'அன்பரே... உங்கள் இசைக்கருவியால், என் தலையில் அடித்ததில், இசைக்கருவி உடைந்து விட்டது. அதற்கான, நஷ்ட ஈடு பணத்தை எடுத்து வந்துள்ளேன். இப்பணத்தில், புதிய இசைக்கருவியை வாங்கிக் கொள்ளுங்கள்.
'இசைக்கருவி உடைந்ததால், உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கும், அதை மாற்றுவதற்காக, கொஞ்சம் இனிப்புப் பலகாரங்களை, எடுத்து வந்துள்ளேன்; சாப்பிட்டு, மனதை இனிமையாக்கிக் கொள்ளுங்கள்' என்றிருந்தது.
பயாசித்தின் நற்குணத்தை அறிந்த இசைக்கலைஞனின் மனம் நெகிழ்ந்தது. அன்று முதல், குடிப்பழக்கத்தை நிறுத்தியதோடு, முரட்டுத்தனத்தையும் கை விட்டான்.
குட்டீஸ்... தனக்கு தீமை செய்தவருக்கு, நன்மை செய்ததால், ஒரு முரட்டு குடிகாரனை திருத்த முடிந்ததை பார்த்தீர்களா... நீங்களும் அப்படி செய்ங்க...சரியா!
- நிவேதிதா பதிப்பகம்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement