தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, 7 வயது சுசீலுக்கு பொருந்தும். தாய் குந்தவி திரைக்கதையாளராக சினிமாவில் எட்டடி எடுத்து வைக்க, சுசீல் 16 அடி பாய்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் குட்டி சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சுசீல், காமெடியிலும் கலக்கி 'டிவி' சேனல் ஒன்றின் டைட்டில் வின்னராகவும் விருது பெற்று அசத்தி இருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த பாலாஜி, குந்தவி தம்பதியின் மகனான சுசீல், தனது மழலை மொழியில் தினமலர் பொங்கல் மலருக்காக இங்கே பேசுகிறார்.
மதுரை டூ சென்னை வந்தது ஏன்?
அப்பா பாஸ்கரன் திருச்சியில் பேங்க் மேனஜராக இருந்தாரு. 'கனா' போன்ற படங்களில் ஸ்கிரிப்ட் ரைட்டராக அம்மா இருந்தாங்க. எனக்காக சென்னைக்கு குடிவந்துட்டாங்க.
'டப் மாஷ்' எல்லாம் கலக்குவீங்களாமே?
ஆமா... நான் 3 வயசுலிருந்தே 'டப் மாஷ்' பண்ணினதா அம்மா சொல்வாங்க. 4 வயசில் நான் செய்த 'டப் மாஷை' ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தாங்களாம். ரிக்கார்ட் பிரேக் பண்ணினேன்னு எனக்கு அவார்டும் கொடுத்தாங்க.
தனியார் 'டிவி' சேனலின் 'கிங்ஸ் ஆப் காமெடி' ஆனது எப்படி
டிவின்ஸ் அங்கிள்ஸ் அருண், அரவிந்த்தான் அதுக்கு 'கைடு' பண்ணினாங்க. சும்மா ட்ரை பண்ணுனு அம்மா கூப்பிட்டு போனாங்க. 700 பேர் வரை இருந்தாங்க. வீட்டில பண்ணின மாதிரி காமெடி எல்லாம் பண்ணி அசத்தி காமெடி ராஜாவாயிட்டேன்.
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சீட்டீங்களா?
சிம்புதேவன் படத்தில் 'பிக்பாஸ்' விஜயலட்சுமியின் மகனாக நடிக்கிறேன். எஸ்.ஜே. சூர்யாவின் அசிஸ்டென்ட் வினோத்தின் 'திரில்லர்' படத்தில் லட்சுமிராய் மகனாக நடிக்கிறேன். படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து இருக்காங்க. ரவிக்குமார் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்கிறேன். அப்புறம்... பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க பேசிட்டு வர்றாங்க.
நடிகர் விஜய்னா ரொம்ப இஷ்டமாமே?
சின்ன வயசுல விஜய் எப்படி இருப்பாரோ அப்படி நான் இருப்பதாக எல்லோரும் சொல்றாங்க. 'டப்மாஷில்' அவரை 'இமிடேட்' பண்ணி அதிகம் பேசி நடிச்சேன். அவருடன் நடிக்க ஆசையா இருக்கு.
பல குரலிலும் அசத்துவீர்களாமே?
விஜய் உட்பட 16 நடிகர்களின் குரல்களில் பேசுவேன். ஆல்டம் என்பவர்தான் எனக்கு கைடாக இருந்தார்.
படிப்பில் எப்படி?
நடிப்பு, படிப்பில் நான் எப்போதுமே சுட்டிதான். நான் படிக்கிற ஸ்கூலில் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அதனால எனக்கு 'ஈஸி'யாக இருக்கு. ஷூட்டிங் இருந்ததால் அரையாண்டு தேர்வில் 3 பாடங்களை எழுத முடியவில்லை. அதனால என்னை தனியாக எழுத வைச்சாங்க. நல்ல வேளை பாஸாயிட்டேன் என சந்தோஷத்தில் தாய் குந்தவி மடியில் இருந்து ஓட்டம் எடுத்தார் சுசீல்.
இவரை வாழ்த்த 97154 41677
தமிழகத்தின் குட்டி சூப்பர் ஸ்டார்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!