Advertisement

பந்தயப் புலி நரேன்!

நரேன் கார்த்திகேயன்14.1.1977கோவை, தமிழ்நாடு.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை கார் பந்தயத்தில் அடையாளம் காண்பித்துப் பெருமை சேர்த்ததில் நரேன் கார்த்திகேயனுக்கு முக்கியப் பங்கு உண்டு. 'ஃபார்முலா ஒன்' கார் பந்தயத்தில் கலந்துகொண்ட முதல் இந்தியர் இவரே. நரேனின் தந்தை கார் பந்தய வீரர் என்பதால், இவரும் சிறுவயதில் இருந்தே கார்களை நேசிக்கத் தொடங்கினார். சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் 1992இல் நடைபெற்ற ஃபார்முலா மாருதி பந்தயத்தில் வெற்றிபெற்று, சர்வதேசப் பயணத்தை வேகமாகத் தொடங்கினார். ஐரோப்பாவில் கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் நரேன். 1995இல் ஆசிய ஃபார்முலா பந்தயங்களில் சீறிப் பாய்ந்த நரேன், மலேசியாவில் நடந்த போட்டியில் 2வது இடம் பிடித்தார். தொடர் சாதனைகளின் மைல்கல்லாக 1996ஆம் ஆண்டு ஆசிய ஃபார்முலா பந்தயங்களில் முதல் வீரராக வென்று 'முதல் ஆசியர்' என்ற பெருமை பெற்றார். பின்னர், உலகப் புகழ்பெற்ற ஃபார்முலா- 1 பந்தயத்தில் ஜோர்டான் அணி சார்பாக 2005இல் பங்கேற்ற முதல் இந்தியரும் நரேன் கார்த்திகேயன்தான். 'தடைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை, அதில் நாம் ஒவ்வொருவரும் வல்லுநர்கள். நம் பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடியும். தன்னம்பிக்கையுடன் செயற்படுங்கள்; வாழ்வில் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயற்பட்டால் வெற்றி நிச்சயம்' என்று அறிவுறுத்துகிறார் நரேன். இப்போது, கார் பந்தயத்தில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement