Advertisement

தேதி சொல்லும் சேதி

ஜனவரி 15, 1949 - இந்திய இராணுவ நாள்பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவின் முதல் இராணுவத் தளபதியாக கே.எம். கரியப்பா இந்நாளில் பதவி ஏற்றார். அவர், இராணுவத்தில் தன்னலமற்ற சேவை புரிந்ததை நினைவுகூர, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனவரி 15, 1841 - ஜான் பென்னிகுவிக்ஆங்கிலேயப் பொறியாளர். தன் குடும்பச் சொத்துகளை விற்று, தமிழகம், கேரள மாநிலங்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜனவரி 17, 1706 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பிறந்த நாள்அறிவியல், அரசியல், இசை என, பன்முகத் திறமை கொண்டவர். இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். இவரது மேற்பார்வையில்தான் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் உருவானது.
ஜனவரி 17, 1942 - முகமது அலி பிறந்த நாள்அமெரிக்காவின் 'ஹெவி வெயிட்' குத்துச்சண்டை வீரர். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56 வெற்றிகள்; 37 நாக் அவுட். இதனால் 'நாக் அவுட் நாயகன்' என்று அழைக்கப்பட்டார். 3 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜனவரி 19, 1736 - ஜேம்ஸ் வாட் பிறந்த நாள்ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொறியாளர். பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். நீராவி இயந்திரத்தில் மாற்றங்கள் செய்து தொழிற்புரட்சிக்கு வித்திட்டார். 'குதிரைத் திறன்' முறையைக் கொண்டு வந்தார். மின்சார அளவுமுறைக்கு இவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 20, 1937 - அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள்4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நாளில் பதவியேற்பார். பதவியேற்கும் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், மறுநாள் ஜனவரி 21 திங்கட்கிழமையில் பதவியேற்பார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement