Advertisement

ஸ்பெஷல் காபி!

ஒரு கப் காபியின் விலை, 1,600 ரூபாய் என்றால், நம்ப முடிகிறதா! உண்மை தான்... 'காபிலுவாக்' என்றழைக்கப்படும் இது, பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. ஒரு கப் காபி, இவ்வளவு ரூபாய் என்றால், காபி கொட்டை விலை எவ்வளவு இருக்கும் என, கேள்வி எழுகிறது அல்லவா! இந்த ரக, காபி கொட்டை, கிலோவுக்கு, 45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம், பனம்பிள்ளி நகரில் உள்ள, 'கபே காபிலுவாக்' என்ற உணவு விடுதியில், ஆறு மாதங்களாக இந்த காபி விற்கப்படுகிறது. இங்கு தினமும், 10 பேர் காபி குடிக்க வருகின்றனர்.
— ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • manivannan - chennai,இந்தியா

    கோபிலுவாக் நமக்கு சரிப்படாது, மலிவாக கொடுத்தால் கூட. அதன் மூலத்தை விளக்கியபின்... அது நம்ப மனப்பான்மை. சிறந்து விளங்குவதை நன் அங்கே அதுசரி காப்பி பழம் என்றா சொல்வார்கள்? தரம் வாய்ந்த காபி உற்பத்தியில் எத்தியோப்பியா புகழ் பெற்று விளங்கியதை அங்கே இருந்த பொழுது பார்த்திருக்கிறேன். காபி பீன்ஸ் என்றுதானே சொல்வார்கள்?

  • Manian - Chennai,இந்தியா

    கோப்பி லுவாக் (Kopi Luwak ) என்ற காப்பிதான் இந்தோனீசிய மரப் பூனை (palm civet, a dark brown tree-dwelling கேட்) - மிக பழுத்த காபி பழத்தை தின்று, அதன் மலத்துடன் வெளியே விடும் விதைகளை, நன்றாக கழுவி எடுத்து, , பின் தோலை நீக்கி வறுத்து அரைத்த காபியே உலகில் அதிக விலை உள்ள காபி. அது விளைச்சல் குறைவே. ஜப்பானியார்களே இதை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தவறான தகவல். ஒரு கிலோ காப்பி கொட்டையில் அதிக பட்சம் நல்ல தரத்தில் சுமார் நூறு காப்பி மட்டுமே போடமுடியும். எனவே கிலோ 45 லட்சம் என்பது தவறு உலகிலேயே விலை அதிகம் உள்ள காப்பி வியட்நாமில் மட்டுமே கிடைக்கிறது.

    • Manian - Chennai,இந்தியா

      இந்த காஃபி இந்தியாவில் கிடையாது. இந்தோனீசிய மர பூனைகள் ருசியான பழுத்த காஃபி பழத்தை தின்று அது விட்டையுடன் போடும் கொட்டை .இந்த மர பூனையின் வயிற்றில் ஜீரணிக்கப்பட்ட பழம், இந்த காபியின் ரசாயனத்தை மாறறிவிடுகிறது. அப்போது காபியின் அமிலத்தன்மையை குறைத்து, அதன் ருசியை உயர்த்திவிடுகிறது. சுமத்ரா , பாலி, ஜாவா, சுலாவெசி என்ற இடங்களில் இந்த அபூர்வ பூனை உள்ளது. இந்த "கோபி லுவாக்" என்ற காஃபிக் கொட்டை இதை ஏஷியன்ரெஸ்பாண்டெண்ட் என்ற மின் வலைத்தளத்தில் காணலாம். இதன் விலை ஒரு கிலோ அமெரிக்க 700 டாலர். வியட்நாம் கடைகளில் இந்த காபி பானமாக விறக்கப்படுவதில்லை. இந்தியாவில் இது கிடையாது. இந்திய காஃபி ஆப்ரிகாவில் அபிசீனியா- தற்போதைய எத்தியோப்பியாவிலிருந்து போர்ச்சுகீசியர்களால் கொண்டு வரப்பட பிபிரி, ரோபஸ்ட்டா ஆகும். இது போலவே கிலோ 1000 பவண்டிற்கு விற்கும் துளிர் டீயும் இருக்கிறது. சைனாவில் வெள்ளி முனை -Silver Tips teas - Makaibari எஸ்டேட் ஒரு கிலோ அமெரிக்க $3,300 விற்கப்படுகிறது. இது நாயர் டீ கடையில் விற்கப்படுவதில்லை. இந்தியாவிலும் கிடையாது. மோஸ்ட-எக்ஸ்பன்சிவ்.காம் மில் தேடவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement