Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்கு, 42 வயதாகிறது. இயந்திர மயமான வாழ்க்கை. இது போன்று, இயந்திரமயத்தில் சிக்கி திணறுபவர்களை, சிறுவர்களாக மாற்றி, குதுாகலிக்க வைக்கும் ஒரே இதழ், சிறுவர்மலர் தான்.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிக் கிழமையை, ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்போம். குடும்பமே திரண்டு சிறுவர்மலர் இதழை படித்து மகிழ்வோம்.
என் மாமனார், 30 ஆண்டு கால சிறுவர்மலர் புத்தகத்தை, ஆண்டு வாரியாக, 'பைண்ட்' செய்து, முறையாக பராமரித்து வருகிறார். வீட்டிற்கு வரும் குழந்தைகளிடம், அவற்றை கொடுத்து படிக்க ஊக்குவிப்பார்.
அது, மனித மனத்தை, குழந்தையாக மாற்றும் பொக்கிஷம்.
வாழ்க சிறுவர்மலர்; வளர்க அதன் பணி!
- டி.ரவிக்குமார், பொள்ளாச்சி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement