Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

கிரெடி... டெபிட்...!
பலரும், கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதில், அதிகமாக பயன்படுத்த ஏற்றது எது... இந்த கேள்வி, அவ்வப்போது, எழும். இரண்டுமே, 16 இலக்க எண், காலாவதி தேதி, பாதுகாப்புக்காக, 'பின் எண்' வசதி உள்ளவை தான்.
வங்கிக் கணக்கில், பணம் இருந்தால் தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால், பணம் இல்லை என்றாலும், கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்; செலவு செய்யலாம்.
கிரெடிட் கார்டில் உள்ள சிறப்புகள்...
* 'ஷாப்பிங்' செய்யும் போது, 'கேஷ் பேக்' தள்ளுபடி போன்ற, சலுகைகள் கிடைக்கும்
* செலவு செய்த தொகையை, முறையாக திருப்பிச் செலுத்தினால், வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். அதன் மூலம், பரிசுகள், சேவை புதுப்பித்தல் போன்ற சலுகைகள் பெற முடியும். தவணை முறையில், பொருட்கள் வாங்க முடியும். வாங்கும் தொகைக்கு, உரிய வட்டி செலுத்த வேண்டும்
* வரம்பை மீறி, பரிவர்த்தனை செய்ய முடியாது
* கடன் பெற வங்கியில் விண்ணப்பிக்கும் போது, 'கிரெடிட் ஸ்கோர்' எனப்படும், கடன் மதிப்பெண்ணை சோதிப்பர். சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தி இருந்தால், 'கிரெடிட் ஸ்கோர்' உயர்ந்து இருக்கும். எனவே, எளிதாக கடன் பெற முடியும்

இவை எல்லாம், ஒப்பீட்டு அளவில், கிரெடிட் கார்டுக்கான முன்னுரிமை விஷயங்கள்.
தவணை தொகையை, சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டுமே, கிரிடிட் கார்டு வாங்குவது நல்லது. கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், தாமத கட்டணமும் அதற்கு அபராதமும், வட்டியும் செலுத்த வேண்டும்.
கண்ட பொருட்களை எல்லாம், வாங்க விரும்புவோருக்கு, கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமல், செலவிட்டால், 'கடன் அறிக்கை' வரும் போது கசக்கும். ஆசையில், மனம் போன போக்கில் செலவழிப்பவர், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர், கிரெடிட் கார்டை தொடாமல் இருப்பதே நல்லது.

உணவு அற்புதம்!
* கைப்பிடி அளவு பச்சை பயிறை ஊற வைத்து முளை கட்டி, காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.
* நெல்லிக்காயை, உணவில் சேர்த்து வந்தால், இளநரை, கருமையாக மாறும்; நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றலையும் சாப்பிடலாம்.
* புற்றுநோயாளிகளும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளோரும், உணவில், கூடுதலாக மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும். புற்றுநோயை கட்டுப்படுத்தும், மருத்துவ குணம், மஞ்சளுக்கு உண்டு.
* காலை இஞ்சி, பகலில் சுக்கு, மாலை கடுக்காய் என 48 நாட்கள் சாப்பிட்டு வர கோலுான்றி குனிந்து நடப்பவர், கோலை விட்டு, 'கூலாக' நடப்பர்!
- என்றென்றும் அன்புடன்
அங்குராசு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement