Advertisement

கிழங்கு வடை!

தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
புழுங்கல் அரிசி - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உப்பு, பெருஞ்சீரகம் - சிறிதளவு.

செய்முறை:
மரவள்ளிக் கிழங்கின் மேல் பட்டையை உரித்து, கிழங்கை சீவி, பிழிந்து, தண்ணீரை அகற்றவும். சீவிய கிழங்கை, சிறிது நேரம் உலர விடவும். கடலைப் பருப்பு, அரிசி, மிளகாய். உளுந்து ஆகியவற்றை சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அந்த கலவையுடன், கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசைய வேண்டும். அந்த மாவு கலவையை வடை போல் தட்டி, எண்ணெயில் வேக வைத்து எடுக்கவும். கிழங்கு வடை தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- மு.காமாட்சி, குறிஞ்சிப்பாடி.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement