Advertisement

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வாய்ப்பு

ஐ.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவிலான முத்திரை பதிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் லிக்விட் புரொபல்ஷன் மையமானது திருநெல்வேலி அருகிலுள்ள மகேந்திரகிரியில் உள்ளது. தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்ட்/இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: சிவிலில் 9, எலக்ட்ரிகலில் 5, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏர் கண்டி ஷனிங்கில் 2, ஆர்க்கிடெக்சரில் 1, எலக்ட்ரிகலில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 100.

கடைசி நாள்: 2019 ஜன., 15.

விபரங்களுக்கு : www.isro.gov.in/sites/default/files/bilingual_advt_for_website.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement