Advertisement

எண்ணெய் நிறுவனத்தில் வேலை

ஆயில் அண்டு நேசுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனம்.
சூரத் அருகிலுள்ள ஹசீரா போர்ட்டில் உள்ள இதன் மையத்தில் தற்போது காலியாக உள்ள 36 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிகலில் 2, ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான பிட்டிங்கில் 9, டீசலில் 5, எலக்ட்ரிகலில் 3, புரொடக்சனில் 4, கெமிஸ்ட்ரியில் 3ம் சேர்த்து மொத்தம் 36 இடங்கள் உள்ளன.

வயது: 2019 ஜன., 24 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொடர்புடைய டிரேடு பிரிவில் சர்டிபிகேட் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் அறியவும்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.370.-

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். இத்தேர்வு சூரத்தில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்னப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஜன., 24.

விபரங்களுக்கு: www.ongcindia.com

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement