Advertisement

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் பணி

இந்திய ராணுவத்தின் பெருமைமிகு அங்கங்களில் ஒன்றான கப்பல் படையின் பிரிவான கடலோர காவல்படை ஆண்டு தோறும் உதவி கமாண்டன்ட் எனப்படும் அதிகாரி நிலை பணியிடங்களை அறிவிக்கிறது. கடும் போட்டியை உள்ளடக்கிய இந்த பணிகளுக்கான தேர்வு முறை குறித்து இங்கே பார்க்கலாம்.
பொதுப் பணி தகுதிகள்: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அனைத்து செமஸ்டர்களிலும் படித்திருக்க வேண்டும்.* பிற பி.எஸ்சி., படிப்பு களை முடித்திருப்பவர் இதேபோல 60 சதவீதத்துடன் ஒவ்வொரு செமஸ்டரையும் முடித்திருப்பதும் முக்கியம். * பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் கணிதத்தை படித்திருப்பது மிக அவசியம். * 1.7.1994- 30.6.1999க்குள் (இரு நாட்களும் உட்பட) பிறந்திருப்பது மிக மிக அவசியம். *ஆண்களுக்கான பணியிடங்கள் இவை பொதுப்பணி (எஸ்.எஸ்.ஏ.)
தகுதிகள்: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அனைத்து செமஸ்டர்களிலும் படித்திருக்க வேண்டும்.* பிற பி.எஸ்சி., படிப்புகளை முடித்திருப்பவர் இதேபோல 60 சதவீதத்துடன் ஒவ்வொரு செமஸ்டரையும் முடித்திருப்பதும் முக்கியம். * பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் கணிதத்தை படித்திருப்பது மிக அவசியம். * 1.7.1994-- 30.6.1999க்குள் (இரு நாட்களும் உட்பட) பிறந்திருப்பது மிக மிக அவசியம்.
*பெண்களுக்கான பணியிடங்கள் இவை. கமர்ஷியல் பைலட் என்ட்ரி (சி.பி.எல்.,) எஸ்.எஸ்.ஏ.,
தகுதிகள்: டி.ஜி.சி.ஏ.,வால் அங்கீகரிக்கப்பட்ட தற்போது செல்லதக்கதான சி.பி.எல்., பெற்றிருக்க வேண்டும்.* பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.* 1.7.1994-30.6.2000 க்குள் பிறந்திருக்க (இரு நாட்கள் உட்பட) வேண்டும். * இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
சட்டம் *குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் சட்டப் படிப்பு ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். * பட்டப்படிப்புக்கு பின் 3 ஆண்டுகள் படிப்பாகவோ அல்லது பிளஸ் டூவிற்குப் பின் 5 ஆண்டுப் படிப்பாகவோ அதை பெற்றிருக்க வேண்டும். * 1.7.1989-30.6.1998 க்குள் பிறந்திருக்க வேண்டும்.* இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத் தகுதிகள் * உதவி கமாண்டன்ட் பொதுப் பணிக்கும் சட்டப் பணிக்கும் குறைந்தது 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.* பெண்கள் 152 செ.மீ. இருக்க வேண்டும். *பொதுவாக ராணுவத்திற்குத் தேவைப்படும் உடல் மற்றும் மருத்துவத் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை *இரு கட்டத் தேர்வு முறைகள் உண்டு.* Mental Ability Test/Cognitive Aptitude Test, Picture Perception, Discussion Test போன்றவை முதற் கட்டத்தில் நடத்தப்படும்.*இதில் வெற்றி பெறுவோருக்கு உளவியல் திறனறியும் தேர்வு, குழுத் திறனறியும் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். * சான்றிதழ் பரிசோதனைக்குப் பின் இறுதியாகப் பணிக்கு அமர்த்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை * ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும் நவம்பர் 18-30 வரை விண்ணப்பிக்கலாம்* முழு விபரங்களையும் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளவும் இணையதள முகவரி: www.joinindiancoastguard.gov.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement