Advertisement

நவகிரக தரிசனம் செய்ய...

சென்னையில் இருந்து, வெள்ளிக் கிழமை தோறும், காலை, 10:30 மணிக்கு புறப்பட்டு, திங்கள் கிழமை, காலை, 5:00 மணிக்கு வந்தடையும் வகையில், மூன்று நாட்கள் நவக்கிரக ஆன்மிக சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்கிறது.
இதில், அங்காரஹ தலம் உள்ள, வைத்தீஸ்வரன் கோவில்; புதன் தலம் உள்ள, திருவெண்காடு; கேது தலம் உள்ள, கீழ்பெரும்பள்ளம்; சனி தலம் உள்ள திருநள்ளார்; குரு தலம் உள்ள ஆலங்குடி; சந்திரன் தலமுள்ள திங்களூர்; ராகு தலமுள்ள, திருநாகேஸ்வரம்; சூரிய தலம் உள்ள சூரியனார்கோவில் மற்றம் சுக்கிரன் உள்ள கஞ்சனுார் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம். இதற்கு, ஒருவருக்கு குறைந்த பட்சம், 3,500 முதல், 4,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, 044 - 2533 3444, 91769 95810 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்; சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement