Advertisement

தலைநகரை சுற்றி வர...

இந்தியாவின் தலைநகரான டில்லியின் முக்கிய இடங்களை ரசிக்க, டில்லி சுற்றுலா வளர்ச்சி கழகம் தினமும் ஏற்பாடு செய்கிறது. வழிகாட்டி, தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுடன், குறைந்த செலவில், இந்த அமைப்பு ஏற்பாடு செய்கிறது. அரை நாள் முதல், ஒரு வாரம் வரை, பல்வேறு விதமான சுற்றுலா பேக்கேஜ்கள் உள்ளன. இதனால், குடும்பமாகவோ, தனியாகவே, குழுவாகவோ செல்லலாம்.
டில்லியில் இருந்து, நான்கு நாட்களை கழிக்க, ஹரித்துவார், ரிஷிகேஷ், முசோரி; ஐந்து நாட்கள், விடுமுறை நாட்களை கொண்டாட, ஜெய்ப்பூர் - உதய்பூர்; மணாலி மற்றும் பத்ரிநாத்; ஒன்பது நாட்கள் கொண்டாட, ராஜஸ்தான் என, சுற்றுப்புற பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லும் வசதி உள்ளது.
டில்லியில் உள்ள பிரபலமான இடங்களான, லட்சுமி நாராயணன் கோவில், குதுப் மினார், பாஹல் ஹவுஸ் என்னும் தாமரை கோவில், காந்தி ஸ்மிரிதி, நுழைவாயில், செங்கோட்டை, ராஜ்காட், ஹுமாயூன் கல்லறை, பெரோஷா கோட்லா மைதானம் ஆகியவற்றை, ஒரே நாளில் கண்டு களிக்கலாம். இதற்கு, ஒரு நபருக்கு 455 ரூபாய் கட்டணம்.
மேலும் விபரங்களுக்கு, டில்லி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின், சென்னை தகவல் தொடர்பு அலுவலரை, 92834 97985 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement