Advertisement

திண்ணை!

வானதி பதிப்பகம், 'சுதந்திர போரில் தமிழ் இலக்கியம்' என்ற நுாலிலிருந்து: மணியாச்சி ரயில்வே சந்திப்பில், ஜூன் 17, 1911ல், காலை, 10:45 மணிக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை, சுட்டு வீழ்த்தி, தன்னையும் சுட்டுக் கொண்டான், வாஞ்சிநாதன்.
இது குறித்து, சென்னை, 'சுதேசமித்திரன்' பத்திரிகையின், ஜூன் 19, 1911ல் வெளியான பதிப்பில் வந்துள்ள செய்தி: திருநெல்வேலி கலெக்டர் மிஸ்டர் ஆஷின் கொலை விபரம்!
நேற்று, சனிக்கிழமை காலை, 10:45 மணி சுமாருக்கு, மணியாச்சி ஜங்ஷனில், திருநெல்வேலி கலெக்டர் மிஸ்டர் ஆர்.டி.ஆஷ், கொடைக்கானல் ரோடு ஸ்டேஷன் என்று சொல்லப்படுகிற அம்மையநாயக்கனுாருக்கு வண்டியேற, துாத்துக்குடி, 'போட் மெயிலை' எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரை, 25 வயதுள்ள ஒரு பிராமணன் சுட்டான் என்ற சமாசாரம் எட்டியிருக்கிறது. இந்த சம்பவம் பற்றி, இன்று, 'மித்திரன்' துணையங்கத்தில் உள்ளது. இச்சதி செயலை பற்றி சென்னைக்கு பின்வருமாறு தந்திகள் எட்டியிருக்கின்றன.
மிஸ்டர் ஆஷ், ஒரு ஸ்மார்த்த பிராமணனால் சுடப்பட்டார். 25 வயதுடைய அந்த பிராமணன், மணியாச்சி ஸ்டேஷன், கக்கூசுக்குள் சென்று, தன்னையும் சுட்டுக் கொண்டுள்ளான்.
மிஸ்ஸஸ் ஆஷ், மிஸ்டர் ஆேஷாடு கொடைக்கானல் போக, துாத்துக்குடி மெயில் வண்டியை எதிர்பார்த்து, முதல் வகுப்பு பெட்டியில் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது, நன்றாய் உடை உடுத்தியிருந்த பிராமணன் ஒருவன், திடீரென்று அவர்கள் முன் வந்து, மிஸ்டர் ஆஷின் மார்பில் ரிவால்வரால் சுட்டான். உடனே, பக்கத்திலிருந்தவர்கள் தன்னை பிடிக்க வருவதை பார்த்து, 'என்னை தொடுகிறவர்களை நான் சுட்டு விடுவேன், ஜாக்கிரதை...' என்று பயமுறுத்தி, கக்கூசுக்குள் சென்றான்.
போலீசார் அங்கு போய் பார்த்தபோது, அவனை, பிணமாய் கண்டனர்.
சென்னைக்கு கிடைத்திருக்கும் வேறொரு தந்தியில், திருநெல்வேலியிலிருந்து தம் மனைவியோடு கொடைக்கானல் செல்ல, முதல் வகுப்பு பெட்டியில் மணியாச்சி வந்து சேர்ந்தார் மிஸ்டர் ஆஷ்.
மிஸ்ஸஸ் ஆைஷ முதல் வகுப்பு பெட்டியிலேயே விட்டுவிட்டு, மணியாச்சி ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், மெயில் வண்டியின் வரவை எதிர்பார்த்து, ஆஷ் உலாத்திக் கொண்டிருந்தார் என்றும், அப்போது ஒரு பிராமணன் அவரை துப்பாக்கியால் சுட்டானென்றும் தெரிகிறது.
மிஸ்டர் ஆஷ் வந்த வண்டியிலேயே, அந்த பிராமணன் இரண்டாவது வகுப்பில் ஏறி வந்ததாய் சொல்லப்படுகிறதென்றும், அவனும் கீழே இறங்கி உலாத்துவது போல உலாத்தி, மிஸ்டர் ஆைஷ சுட்டதாக சொல்லப்படுகிறதென்றும் அத்தந்தி தெரிவிக்கிறது.
மேலும், ஆைஷ சுட்டுவிட்டு, கக்கூசை நோக்கி ஓடுகையில், போலீசாரும் மற்றவர்களும் அவனை துரத்தியபோது, அவன், யார் மேலும் இலக்கு வைக்காமல், ஆகாயத்தை நோக்கி சுட்டு, தன் தொண்டையிலும் சுட்டு, அந்த நிமிஷமே இறந்து போனானென்றும் அத்தந்தி தெரிவிக்கிறது.

முல்லை சத்தி எழுதிய, 'அண்ணாதுரையும் தம்பியரும்' நுாலிலிருந்து: கடந்த, 1938ல், ஈ.வெ.ரா., இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். அன்றைய முதலமைச்சர் ராஜாஜி,
அவரை கைது செய்து பெல்லாரி (இன்றைய ஆந்திரா) சிறையில் அடைத்தார். சில மாதங்கள் சிறைவாசத்திலிருந்து மீண்ட பின், சென்னை கடற்கரையில், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமையில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், சி.பி.சிற்றரசு உள்ளிட்டோர், இந்தி எதிர்ப்பு வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கேள்வியோடு, ஒரு துண்டுச் சீட்டு மேடைக்கு வந்தது.
அதாவது, திராவிடர் கழகத்தின் ஆதரவாளராக இருந்த அப்போதைய மேயர் பாசுதேவ் என்பவருக்கு தமிழில் பேச வராது. அதை குறிப்பிட்டு, 'தமிழை வளர்ப்பதாக கூறும் உங்கள் கட்சியை சேர்ந்த பாசுதேவ், ஏன் தமிழில் பேசவில்லை?'
- இதுதான் அந்த கேள்வித் தாளில் எழுதப்பட்டிருந்த வாசகம்.
இதற்கு பதில் அளித்த, சி.பி.சிற்றரசு, 'இந்தியை திணிக்கும் ஆச்சாரியார் ராஜாஜி, என்றைக்கு இந்தியில் பேசுகிறாரோ, அன்றே எங்கள் பாசுதேவ் தமிழில் பேசுவார்...' என்று கம்பீரமாக பதிலளித்தார்.
இதைக் கேட்ட, ஈ.வெ.ரா., 'பொதுக் கூட்டங்களில் இப்படித்தானுங்க பதில் சொல்லணும். அப்பதான் பயலுங்க வாலாட்ட மாட்டாங்க...' என, சி.பி.சிற்றரசை பாராட்டினார்.

'அறிவோம் தெளிவோம்' நுாலிலிருந்து: இஸ்ரேல் பிரதமராக இருந்த, டேவிட் பென் கூரியன், அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கமுடையவர். இவர் எந்த சினிமாவையும் முழுமையாக பார்க்காமல், பாதியில் எழுந்து வந்து விடுவார்.
ஆனால், '42 - 6' என்ற படத்தை முழுவதுமாக பார்த்தார். அந்த படம், அவரது வாழ்க்கை சரிதம்.

நடுத்தெரு நாராயணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement