Advertisement

பங்குச் சந்தை நிறுவனத்தில் பணி

செக்யூரிடிஸ் அண்டு எக்ஸ்சேஞ் போர்டு ஆப் இந்தியா நிறுவனம் சுருக்கமாக செபி என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மையமாக இந்த அமைப்பு திகழ்கிறது. இதில் 120 அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: ஜெனரலிஸ்ட் பிரிவில் 84, லீகல் பிரிவில் 18, இன்பர்மேஷன் டெக்னாலஜியில் 8, சிவில் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் தலா 5 என மொத்தம் 120 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஆக., 31 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் முடித்தவர்கள், சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், சி.எப்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சட்டம், இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். லீகல் பிரிவுக்கு சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு இன்ஜினியரிங்கில் தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 850.

விபரங்களுக்கு: முழுமையான விபரங்களை செபி வரும் 15.09.2018 முதல் இணையத்தில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. http://www.sebi.gov.in/

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement