Advertisement

ஐபால் அறிமுகப்படுத்தும் 'பிரேம்' ஸ்பீக்கர்

இனிமையான இசையை வழங்குவதுடன், சுவரையும் அலங்கரிக்கும் 'வால் ஆர்ட்' வுட்டன் ஸ்பீக்கரை, ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தட்டையான, செவ்வக வடிவ மர பேனலுக்குள், ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு, மேற்புறம் ஆர்ட் கேன்வாஸ் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கவர்ச்சியான ஸ்பீக்கர். 'மசாட்நியு' தொழில்நுட்பம் மூலம் துல்லியமான இசையை வழங்கும் இந்த ஸ்பீக்கர், ஏழு வகையான பேனல் வடிவமைப்புகளில் இது கிடைக்கிறது.
அறையை நிறைக்கும் தெளிவான இசையுடன், அற்புதமான பாஸ் ஒலியை வெளிப்படுத்தும் விதமாக மரப்பெட்டகத்தில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர், புளுடூத், மைக்ரோ எஸ்.டி., எப்.எம்., ரேடியோ, 12 மணி நேர பிளேபேக் அளிக்கும் பில்ட்-இன் ரீசார்ஜபிள் பேட்டரி, இரண்டு பிரேம் ஸ்பீக்கர்களை இணைக்கும் 'ட்ரூ வயர்லெஸ்' தொழில்நுட்பம், ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.

விலை: ரூ.11,999/-*

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement