Advertisement

கடலை பருப்பு சுண்டல்

கடலை பருப்பு - 2 கப்
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை- 2
சோம்பு- 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 10 இலை

செய்முறை
கடலை பருப்பை ஒருமணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவிடவும். எளிதில் பொங்கி வழியக்கூடும், அதனால் கொதி வரும் போது கலக்கி விடவும். ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்தால் பருப்பு மிருதுவாக வேகும். பருப்பு நன்கு உள்வரை வேக விடவும். குழையாமல் பார்த்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு பட்டை, சோம்பு, பெருங்காயம் தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வேகவைத்த கடலை பருப்பை, தண்ணீரை வடித்து சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் 10 நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான கடலை பருப்பு சுண்டல் ரெடி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement