Advertisement

வண்ணங்களில் ஜொலிக்கும் கோவில் படிக்கட்டுகள்

மலேசியாவில் பிரபலமான இடங்களுள் ஒன்று, ஆன்மிகத் தலமான பத்துமலைக் குகை முருகன் கோவில். சுப்பிரமணிய சாமி கோவில் என்றழைக்கப்படும் இது, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் இருக்கிறது. இங்கு இந்துக்கள் தவிர சீனர்களும் கூட வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள். இக்கோவியில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலம்.
இந்த ஆண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவை முன்னிட்டு, அதன் 272 படிக்கட்டுகளுக்கும் டெக்னிகலர் வண்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்கு செல்லும் பாதையையே அழகாக்கி, கோவிலுக்கு ஒரு புதிய தோற்றத்தை அளித்துள்ளது. இந்த புதிய தோற்றம், சுற்றுலா பயணியரிடையேயும், சமூக வலைதளங்களிலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பாரம்பரிய சின்னத்தில் மாற்றம் செய்து அதன் பழமைக்கு ஊறு விளைவிப்பதாக இதற்கு மலேசிய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தேசிய பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை கோவில் இழந்துவிடுமோ என்று கவலையேற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement